வேலூர் மாவட்டம்,வேலூரில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடைபெறவுள்ள வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவிற்காக வாக்குபதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது இதில் அதிமுக,திமுக,உள்ளிட்டோர்கள் உட்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் உள்ளதால் ஒவ்வொரு வாக்குபதிவு மையத்திலும் பயன்படுத்த இரண்டு வாக்குபதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு வருகிறது அகர வரிசைப்படி சின்னங்கள் பொருத்தப்பட்டு வருகிறது மேலும் 29 ஆவது வரிசையாக வாக்குப்பதிவு இயந்திரத்திலும் இவர்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டாவும் பொருத்தப்பட்டுள்ளது இந்த பணிகள் ஆம்பூர்,வாணியம்பாடி,குடியாத்தம்,அனைக்கட்டு வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதே போன்று ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்திலும் சின்னங்கள் வாக்குபதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு தேர்தல் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.
des : Work on the use of symbols on the voting machines for the Vellore parliamentary election