¡Sorpréndeme!

Bhavani Canal : புதிய பாலம் கட்டித்தர வேண்டும்- பவானிசாகர் மக்கள் கோரிக்கை- வீடியோ

2019-07-20 564 Dailymotion

பவானிசாகர் அணை எதிரே உள்ள பவானி ஆற்றுப்பாலம் மூடப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாகிறது. புதிய பாலம் கட்ட ரூ.7.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. பாலம் கட்டுமானப்பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பான அமைதி பேச்சு வார்த்தை இப்போது சத்தி தாசில்தார் தலைமையில் தாலூக்கா ஆபீஸில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தற்போது உள்ள பழைய பாலத்திற்கு வடக்கே புதிய பாலம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. புதியபாலம் கட்டுமானப்பணியின் போது பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள 27 கடைகள் , 7 குடியிருப்புகள், அகற்றப்படவேண்டிய சூழ்நிலை உள்ளது. பாதிக்கப்படுவோர்க்குஉரிய இழப்பீடு மற்றும் மாற்று இடமும் வழங்கப்படும் என தாசில்தார் கார்த்திகேயன் உறுதி அளித்துள்ளார். நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சிதுறை, காவல்துறை அதிகாரிகள், மற்றும் சர்வகட்சியினர், 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் பங்கேற்றனர்.

‘Speed up work on new bridge across Lower Bhavani Canal’