கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு கிராமத்தில் எழுந்தருளி அருள்பாளிக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ பகவதி அம்மன், நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நூதன ஆலய கும்பாபிஷேகம் வரும் 8 ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. இதனையொட்டி கோயில் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ் தீர்த்தகுடம் எடுப்பதற்காக காப்பு கட்டினார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். முன்னதாக நவதானியங்கள் கொண்டு, மஞ்சள் துண்டில் காப்பு கட்டி, அந்த மூங்கிலுக்கு தயிர், பால் போன்ற புனித தீர்த்தங்கள் கொண்டு காப்பு கட்டப்பட்டது. பின்னர் நடைபெற்ற தீபாராதனையில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வரும் வெள்ளிக்கிழமை அன்று முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.காமராஜ், தீர்த்தக்குடம் கலசத்திற்கு ஊற்ற காவிரி புனித நதியிலிருந்து எடுக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
MLA Kamaraj sabotaged the Bhagwati Amman temple in Krishnarayapuram East village near Karur