¡Sorpréndeme!

ரியல் ஹீரோக்களுக்கு மலர்வளையம் வைக்க முன்வராத ரீல் ஹீரோக்களும் ரசிகர் மன்றங்களும்!

2019-06-28 0 Dailymotion

#terroristattack #pulwamaattack #crpfjawansdied #indiapakisthan #terrorism
ஜம்மு... புல்வாமாவில் வியாழனன்று பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பு நிகழ்த்திய ஆயுதத் தாக்குதலில் 40 சி ஆர் பி எஃப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா ராணுவத்தைப் பொருத்தவரை இது மிகப்பெரிய பயங்கரம். நிகழ்ந்து விட்ட இந்த கொடூரம் குறித்து உளவுத்துறை முன்பே அறிவுறுத்தி இந்திய ராணுவ வீரர்கள் எச்சரிக்கையுடன் இருந்த போதும் நிகழ்ந்து விட்ட இந்த வன்முறையை இந்தியக் குடிமக்கள் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை என்பது எத்தனை நிஜமோ அதே அளவு நிஜம் அங்கே எல்லையில் காவல் காக்கும் வீரர்களின் மனதில் இருக்கும் ஏக்கமும் கூட. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால்... இந்த தேசமக்கள் இன்னும் கூட அல்லது இப்போதும் கூட தேசத்தைக் காக்கும் மிகப்பெரிய பொறுப்பிலிருக்கும் ராணுவ வீரர்களான தங்களுக்கு உரிய மரியாதையையும், கெளரவத்தையும் அளிக்கவில்லையோ அல்லது தங்களது இழப்பு ஷண நேரம் பிரேக்கிங் நியூஸ்களில் அடிபட்டு மக்களால் உணர்ச்சிவசப்பட்டு உச்சுக் கொட்டப்பட்டு மலர்வளையம் வைத்து நான்கைந்து தேச பக்தி மிக்க ஸ்டேட்டஸ்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பிறகு அப்படியே மறக்கப்பட்டு விடும் அனேக பிரச்னைகள் போலவே மக்களால் கையாளப்படுகின்றனவோ என்று! இந்த காணொளியில் ராணுவவீரர் ஒருவர் ஆதங்கப்பட்டிருக்கிறார். அவரது ஆதங்கத்தைப் பற்றி இங்கே அமைதியான வாழ்வு வாழும் குறைந்த பட்சம் உயிரைப் பணயம் வைக்காமல் வாழும் ஒவ்வொரு குடிமக்களும் யோசிக்க வேண்டுமா? இல்லையா? காணொளி வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதற்குள் பலரைச் சென்றடைந்திருக்கவும் கூடும். இதைப் பற்றிய பொதுமக்கள் கருத்தை அறியும் ஆவலுடன் தினமணி இதை வெளியிடுகிறது.

நிஜமாகவே மீடியாக்கள் விவாத மேடை நடத்த வேண்டியது இந்த விஷயங்களின் மீது தானே தவிர வேறு எந்த உப்புச் சப்பற்ற விஷயத்தின் மீதும் அல்ல.

ஒவ்வொரு முறையும் பயங்கரவாதத் தாக்குதல்களின் போதும், போரின் போதும் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்து எல்லையில் பனிமலைச் சிகரங்களின் ஊடே உறைபனியுடன் உறைபனியாக உறைந்து கண்ணுக்குச் சிக்காது தேடி எடுக்கப்பட்ட வீரர்களின் உடல்கள் அனேகம்.

அவர்களது பிரதிநிதிகளாக எவர் கு?