¡Sorpréndeme!

தருமபுரி மாவட்டத்தில் விளைச்சல் அதிகரிப்பால் வெண்டை விலை வீழ்ச்சி- வீடியோ

2019-05-17 1,369 Dailymotion

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, கொளசனஅள்ளி, மொரப்பூர், கம்பைநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பரவலாக வெண்டை சாகுபடி செய்துள்ளனர் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையால் விளைச்சல் அமோகமாக உள்ளது இரண்டு மாத பயிரான வெண்டைக்காய் முறையான பாசன வசதி இருந்தால் 45 நாட்களில் விளைச்சல் தர தொடங்கும் தொடர்ந்து இரண்டு மாதம் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்தால் நாள் ஒன்றுக்கு 120 முதல் 150 கிலோ வரை விளைச்சல் கொடுக்கும் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, கொளசனஅள்ளி, கம்பைநல்லூர், மொரப்பூர் தருமபுரி ஆகிய இடங்களில் மொத்த வியாபாரிகள் மண்டிகள் வைத்து கொள்முதல் செய்து தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடாவிற்கும் வெண்டைக்காய் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது நாள்தோறும் சுமார் 15 டன் வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிலோ ரூபாய் 16 வரை விற்பனை செய்யப்பட்டடது தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூபாய் 8-க்கு மொத்த விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

DES : The price of fall in the price of yield in Dharmapuri district is falling