¡Sorpréndeme!

டிக்டாக் வீடியோ பார்த்த வடமாநில வாலிபர் பலி. நடந்தது என்ன?

2019-04-16 590 Dailymotion

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.கே.ஆர் அவென்யூ பகுதியில் புதியதாக தனியார் மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியில் பீகார் மாநிலம் சுபோல் மாவட்டம் சாத்தப்பூர் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அதே பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில் சம்சத் என்ற வாலிபர் வேலையை முடித்துவிட்டு கட்டுமான பணி நடைபெற்று வரும் கட்டித்தின் 3 வது மாடியில் நின்றபடி செல்போனில் டிக்டாக் வீடீயோ பார்த்துக்கொண்டு அங்குமிங்கும் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக 3 வது மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்தகாயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சம்சத் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு சம்சத்தின் சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. டிக்டாக் வீடியோ பார்த்துக்கொண்டே தன்னை மறந்தபடி மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.