¡Sorpréndeme!

கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் மக்காசோள பயிர் மேலும் கூடுதலான விலை- வீடியோ

2019-04-02 579 Dailymotion

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம், அங்கணகவுண்டன்புதூர், தாசிரிபாளையம், கொண்டப்பநாயக்கன்பாளையம், சின்னட்டிபாளையம், சதுமுகை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். 3 மாத கால பயிரான மக்காச்சோளம் கால்நடைகளுக்கு சிறந்த தீவனப்பயிராக விளங்குகிறது. ஒரு ஏக்கர் மக்காச்சோளம் பயிரிட ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவாகிறது. 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடுவதால் கோவை, காரமடை பகுதியில் உள்ள வியாபாரிகள் நேரடியாக வந்து ஒரு ஏக்கர் மக்காச்சோள பயிரை விலை பேசி அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 3 மாத காலமாக மழை பெய்யாததால் கடும் வறட்சி காரணமாக தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஓரு ஏக்கர் மக்காசோள பயிர் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் மட்டுமே விலை போன நிலையில் தீவன தட்டுப்பாடு காரணமாக தற்போது ஒரு ஏக்கர் ரூ.30 ஆயிரம் வரை விலை போவதால் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை இலாபம் கிடைப்பதாக கூறுகின்றனர். கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் மக்காசோள பயிர் மேலும் கூடுதலான விலைக்கு விற்பனையாக வாய்ப்புள்ளது.

DES : Measan crop is more expensive due to severe drought.