தஞ்சாவூர் நடைபெற உள்ள 18 சட்டமன்ற இடைதேர்தலில் தஞ்சை தொகுதியும் அடங்கும் இத்தொகுதியில் ரெங்கசாமி தேர்வு செய்யப்பட்டு பின்னர் பதவியை இழந்த நிலையில் இன்று அ.ம.மு.கத்தின் நாடாளுமன்ற வேட்பாளர் முருகேசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்தார். சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரெங்கசாமி முதலில் ஒரு வேட்பு மனு தாக்கல் செய்த பின் இரண்டாவதாக மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்ய காத்திருந்த போது கோட்டாச்சியர் அலுவலகத்தில் தன்னை முன்மொழிய உள்ள நகரப் பொருப்பாளர் விருத்தாசலத்தை கோட்டாச்சியர் அலுவலகத்தில் அமர வைத்துவிட்டு கோட்டாச்சியர் அலுவலகத்தில் பிற பகுதியில் வேட்பாளர் அமர்ந்திருந்த நிலையில் கோட்டாச்சியர் சுரேஷ் வேட்பாளர் மட்டும் மனு தாக்கல் செய்யவேண்டும் நேரம் முடிந்து விட்டதால் இம்மனுவை ஏற்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கோட்டாச்சியர் அலுவலக பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. இது குறித்து அ.ம.மு.க வழக்கறிஞர் பிரிவு நல்லதுரை கூறுகையில் வேண்டுமென்றே கோட்டாச்சியர் மனுவை நிராகரித்ததாகவும் அவர் பொறுப்பில் இருந்தால் முறையாக தேர்தல் நடைபெறாது என அவரை மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
The second petition of the ADMK candidate in Thanjavur
#AMMK
#ADMK
#Thanjavur