¡Sorpréndeme!

அருமையான தேர்தல் அறிக்கை.. மனு அளிக்க இப்படியும் வரலாம்..வீடியோ

2019-03-22 2,134 Dailymotion

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் சேக் தாவூத் டெய்லர். திருப்பூர் தொகுதியில் வேட்பளராக களம் இறங்குகிறார். . இவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திருப்பூர் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தேன். நான் 15 தேர்தல் வாக்குறுதிகள் வைத்துள்ளேன். முதலில் எனது தொகுதியில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.25 ஆயிரம் உதவி தொகையை அரசிடமிருந்து பெற்றுத்தருவேன். பின்னர் ஒவ்வொரு குடும்பத்திலுள்ள நபர் ஒன்றுக்கு மாதம் 10 லிட்டர் பிராந்தி சுத்தமானதாக பாண்டிச்சேரியிலிருந்து பெற்றுத்தருவேன். அனைத்து மத பெண்களுக்கும் திருமணத்திற்கு 10 பவுன் நகை, 10 லட்சம் பணம் பெற்றுத் தருவேன். மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கூடாது என டெல்லியில் தொடர்ந்து போராடுவேன் என வாக்குறுதிகளை அள்ளிவீசிn அனைவரையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறார்.

nomination news