¡Sorpréndeme!

பாரதிய ஜனதா கட்சியை வம்புக்கு இழுக்கும் வகையில்,ஜி.வி.பிரகாஷின் வாட்ச்மேன் பட போஸ்டர்- வீடியோ

2019-03-18 1,531 Dailymotion

WatchMan Movie Poster makes controversy.

2019 லோக் சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி "நான் மக்கள் பாதுகாவலர்" என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளது. இதனை குறிக்கும் வகையில் இதன் பொருள் தரும் இந்தி வார்த்தையான 'சவ்கிதார்' என்ற அடைமொழியை பாஜகவினர் தங்கள் பெயருக்கு முன் சூட்டிக்கொள்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் தனது பெயருக்கு முன்னாள் 'சவ்கிதார்' என வைத்துள்ளார். அவரை தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், தனது பெயருக்கு முன்னாள் 'சவ்கிதார்' என்று சேர்த்துள்ளார். இதுபோல் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் பெயருக்கு முன்னாள் 'சவ்கிதார்' என சேர்த்து வருகின்றனர். இதனால் டிவிட்டரில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.

#G.V.Prakash
#WatchMan
#BJP
#Chowkidar
#DirectorVijay