விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவாமாத்துா் கிராமத்தில் உள்ள ஓடை அருகே இன்று அதிகாலை, விழுப்புரம் காவல் சரக
மத்திய புலனாய்வு ஆய்வாளர் கோவிந்தராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரது தலைமையில் அவரது குழுவினர் மற்றும் விழுப்புரம் மது விலக்கு அமலாக்க பிாிவினா் இனைந்து ஒடை அருகே மது விலக்கு வேட்டை செய்ததில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட40 கேன்களில் எாிசாரயம் மொத்தம் 1,400 லிட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.எாி சாராயத்தை
விழுப்புரம் மது விலக்கு அமலாக்க பிாிவில் ஒப்படைத்து விசாரணை செய்ததில் எாி சாராயத்தின் உாிமையாளா்கள் திண்டிவனம் கீழ் எடையாளம் தனலட்சுமி மற்றும் விழுப்புரம் பொியகாலனி ஷிவள்ளி
என்பது தொியவருகிறது.மேற்கண்ட எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவு எதிரிகளை தேடி வருகின்றனர்.
Police seize 1400 liters of fire that was hauled near
Villupuram.
#Villupuram
#Police
#Seize