¡Sorpréndeme!

மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்- வீடியோ

2019-02-15 669 Dailymotion



திருச்சி மாவட்டம், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அருகில் உள்ள பாரதியார் நகர், பூசாரிபண்ணை, வடக்கிப்பட்டி, வடக்கு பாரதியார் நகர் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த ஆறு மாதங்களாக போதிய அளவு குடிநீர் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வரும் குடிநீரும் போதிய அளவில் இல்லை. இங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் காவிரி குடிநீர் முழுகொள்ளளவும் தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. குறைந்த அளவே தண்ணீர்; ஏற்றப்படுவதால் அனைத்து பகுதி பொதுமக்களுக்கும் குடிநீர்; பற்றாக்குறை ஏற்படுவதாக கூறப்படுகிறது. குடிநீருக்காக பலமணிநேரம் காத்துக்கிடக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த சில ஆண்டாக போதிய மழை இல்லாததால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. எனவே பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர்; வழங்கவேண்டும் தண்ணீர் தொட்டியில் முழுவதுமாக தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்; என அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் இன்று அரசு மருத்துவமனை முன்பு மணப்பாறை – புதுக்கோட்டை சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மணப்பாறை போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மணப்பாறை – புதுக்கோட்டை சாலையில் அரை மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Public road traffic with legends for drinking water.