வேலூர்மாவட்டம்,குடியாத்தம் சேத்துவாண்டையில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சார்பில் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் முகாம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது இந்த மாணவ,மாணவிகள் பத்து நாட்கள் குடியாத்தம் பகுதியில் தங்கியிருந்து பல்வேறு கிராமங்களுக்கு சென்று தூய்மை பணி,சுகாதாரம்,வாழ்க்கை முறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர் இந்த முகாம் வேலூர் தொழில்நுட்ப பல்கலைகழக துணைதலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது இதில் திரளான மாணவ,மாணவிகளும் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர் இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் கலந்துகொண்டு முகாமை துவங்கி வைத்து பேசுகையில் ஒவ்வொரு மாணவருக்கும் தன்னம்பிக்கை உழைப்பு ஒருங்கிணைப்பு என்பதும் அவசியம் அவர்கள் மக்களின் நலனுக்காக உழைத்தால் நாடு முன்னேற்றமடையும் இதனை உங்களுக்கு பின்னால் வரும் மாணவர்களும் பின்பற்றுவார்கள் அப்போது தான் மக்களும் முன்னேற்றமடைய அவர்களுக்கு அனைவரும் உதவ இது முன் உதாரணமாக இருக்கும் என்று பேசினார்
DES : Vellore Technological University, Saraswathi Vidyalaya School,