தஞ்சையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அதிமுக கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேசுகையில். பத்திரிக்கையாளர்களும். திமுகவினரும். தொடர்ந்து பேசி வருகிறார்கள்பிஜேபி சொல்வதுதான் அதிமுக செய்து வருவதாக ஒரு தப்பான கருத்தை பரப்பி பேசிக்கொண்டிருப்பதாகவும் ஆனால் தமிழர் நலம் தமிழர் உரிமை நமது நாட்டு திட்டத்திற்கு என்ன தேவை என்பது குறித்து யாரு முட்டுக்கட்டை போட்டாலும் சரி அது பாரதிய ஜனதா கட்சியாக இருந்தாலும் சரி காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி அதை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதுதான் அதிமுக எனவும் தமிழர்கள் நலனில் யார் எதிர்ப்பாக இருந்தாலும் அவர்தான் எங்களுக்கு எதிரி என தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமன் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சேகர் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
DES : Whoever is against the Tamil welfare, he is the enemy of us - the AIADMK co-coordinator Waitingham