¡Sorpréndeme!

கொலைக்கலமாகும் திருவொற்றியூர்..அச்சத்தில் மக்கள் -வீடியோ

2019-01-10 180 Dailymotion

திருவொற்றியூர் கடற்கரை சாலையில் பட்டினத்தார் கோயில் அருகே கார்பேனியம் கம்பெனி உள்ளது. இரவு மாநகர போக்குவரத்து கழகத்தில் தண்ணீர் லாரி ஓட்டும் ஓட்டுனர் பாண்டிதுரை(வயது 50 ) கோயம்பேட்டில் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் கம்பெனி அருகே சிறுநீர் கழிக்க இறங்கியுள்ளார். அப்போது இரண்டு வாலிபர்கள் போதையில் கத்தியில் பாண்டி துறையை வெட்டி உள்ளனர்.ரத்த காயத்துடன் அடிபட்டு கிடந்த அவரை பொதுமக்கள் மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பாண்டித்துரை பீச் ரோட்டில் போலீசார் ரோந்து சென்றால் திருட்டு சம்பவங்கள் குறையும் என்று தெரிவித்தார். விசாரணைக்கு வந்த காவல்துறையினர் பாண்டித்துரை குடித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.அதை மறுத்த உறவினர்கள் குடித்திருந்தால் மருத்துவர்கள் எப்படி சிகிச்சை அளிப்பார்கள் என்று தெரிவித்தார்கள் திருவொற்றியூரில் கனரக வாகன டிரைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ந்து கஞ்சா அடிக்கும் வாலிபர்கள் தொடர்ந்து கத்தியால் குத்தி பணத்தை பறிப்பது செல்போனைப் பிடுங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தார்கள்.

DES : The killing is Thiruvottiyur .. people in the scene