ஜெ.தீபா அணியின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ. தீபா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், விசாரணைக்கு சசிக்கலா தரப்பினர் அழுத்தம் கொடுக்க நேரிடும். அதையும் மீறிதான் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். தங்களது இயக்கம் அதிமுகவை சார்ந்த இயக்கம். அதிமுகவுடன் இணைந்து செயல்படுவது தொடர்பாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்த அவர் எங்களுடைய விருப்பம் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவதுதான் என அவர் தெரிவித்தார்.
DES : J.Deeba who wants to work with ADMK