¡Sorpréndeme!

சர்ச்சையில் சிக்கிய நீட் அனிதா திரைப்படம்- வீடியோ

2018-12-03 454 Dailymotion

சென்னை ஆதம்பாக்கத்தில் அனிதா திரைப்பட தயாரிப்பாளர் ராஜகணபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில் அனிதா திரைப்பட இயக்குநர் அஜய்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் அவரை விலக்கி தானே டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தை இயக்கி தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார். அனிதா திரைப்படம் உண்மை சம்பவம் என்பதால் அவர்களின் குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்போடும் ஒப்புதலோடும் தான் படம் தயாரித்து இயக்கப்படும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. அனிதா குடும்பத்திடம் பேச்சுவார்த்தை செய்ய வேண்டாம் என்று இயக்குநர் அஜய்குமார் கூறியதால் தனக்கும் இயக்குநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இயக்குநரை விலக்கியதாக தெரிவித்தார். நீட் தேர்வால் உயிர் தியாகம் செய்த அனிதா திரைப்படம் சமூக விழிப்புணர்வுக்காகவும், உலக அளவில் விருது பெரும் வகையிலும் அமையும், திரைப்படத்தை தனது சொந்த கம்பெனியான ஆர்.ஜே. பிக்சர்ஸ் மூலமாகவே பதிவு செய்திருப்பதாகவும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை, அனிதா திரைப்படம் குறித்து வரும் செய்தி மற்றும் வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்

des:The controversial movie 'Neet Anita'