¡Sorpréndeme!

முதலைகள் பட்டினி! மூன்று நாளைக்கு ஒரு முறையே இறைச்சி-வீடியோ

2018-11-16 2 Dailymotion

ஒகேனக்கல்லில் முதலைகள் பட்டினி மூன்று நாளைக்கு ஒரு முறையே இறைச்சி அளிக்கபடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கனக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்தும் பரிசல் சவாரி செய்தும் மகிழ்கின்றனர் மேலும் பயணிகள் பார்வையிடுவதற்காக முதலைப் பண்ணையும் அமைக்கப்பட்டுள்ளது இதில் நுழைவு கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது முதலைப்பண்ணையில் சுமார் 159 முதலைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது முதலைப்பண்ணை மூலம் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் முதல் ரூபாய் 5 ஆயிரம் வரை வசூலாகிறது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலா அரை கிலோ இறைச்சி கொடுக்க வேண்டும் ஆனால் வனத்துறை அதிகாரிகள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே உணவு வழங்கப்படுகிறனர் இதனால் முதலைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் சூழ்நிலை ஏற்படுகிறது உணவு பற்றாக்குறையால் சில முதலைகள் இறக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. அதிகாரிகளுக்கு முதலைகளை கணக்கு காட்ட, காவிரி ஆற்றங்கரையோரங்களில் இருக்கும் சில முதலைகளை பிடித்து வந்து கூண்டில் விட்டு கணக்கு காட்டி வருகின்றனர் எனவே முதலைகளுக்கு முறையாக உணவு வழங்க, மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வன சரகர் கூறும்போது முதலைப்பண்ணையில் உள்ள முதலைகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் இறறைச்சி உணவு வழங்க வேண்டும் என அரசாங்க உத்தரவு உள்ளது ஆனால் மேல் அதிகாரிகள் இந்த உத்தரவை பின்பற்றாமல் மூற்று நாட்களுக்கு ஒரு முறை உணவு வழங்குகின்றனர் என தெரிவித்தார்.

Des: The shocking information has been reported that the crocodiles are hungry for three to three times a day in Hokkakal. In Hokkakal, crocodiles are hungry for three times a day....