¡Sorpréndeme!

தியாகராஜர் கோவிலில் மூன்றாம் கட்ட ஆய்வு- வீடியோ

2018-11-15 994 Dailymotion



திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொழில் துறையினர் மூன்றாம் கட்ட ஆய்வினை தொடங்கினர்திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள தஞ்சை, நாகை, திருவாரூர், மற்றும் கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 4359 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து தொல்லியல் துறையினர் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மாதம் தொடங்கி ஆய்வு நடத்தி வருகின்றனர். இரண்டாம் கட்ட ஆய்வு 1ம் தேதி தொடங்கிய நவம்பர் நான்காம் தேதி முடிவுற்றதுஇந்நிலையில் இன்று மூன்றாவது கட்டமாக ஆய்வு காலை 10 மணியளவில் தொடங்கியது. அதன்படி பத்தூர் விசுவநாத சுவாமி கோவில், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில், அம்மையப்பன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், எருக்காட்டூர் சீனிவாச பெருமாள் கோவில், நாகை மாவட்டம் திருக்குவளை திருமேனி நாதர் சுவாமி கோவில் உட்பட 19 கோவில்களில் சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. இந்த ஆய்வை தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் 15க்கும் மேற்பட்ட தொல்லியல்துறையினரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பிக்கள் பழனி செல்வம் மலைச்சாமி ஆகியோர் தலைமையில் 33 சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை 504 சிலைகளை ஆய்வு செய்துள்ள நிலையில், இந்த ஆய்வு மூன்றாம் கட்டமாக தற்போது தொடங்கி உள்ளது. இது இன்னும் ஓரிரு நாட்கள் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.



Des: Statue of the Trafficker and Industry Department started the Third Phase Study at Thiruvarur Thiagarajar templeStatue of the Trafficker and Industry Department started the Third Phase Study at Thiruvarur Thiagarajar temple