¡Sorpréndeme!

கின்னஸ் சாதனையாளர் தற்கொலை !காரணம் என்ன?- வீடியோ

2018-10-27 959 Dailymotion

கின்னஸ் சாதனையாளர் தற்கொலை !காரணம் என்ன

திருப்பூர் நல்லூர் பகுதியில் குடியிருந்து வரும் ஹேமச்சந்திரன் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி அன்று திருப்பூரில் தனது விரல் நகத்தில் துளையிட்டு 22.5 கிலோ எடையை தூக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார் தொடர்ந்து பிரபல முன்னணி தொலைக்காட்சிகளின் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார் அததுடன் மூக்கில் 2 இன்ஞ் டிரில் மெசின் வைத்து இயக்கியும் சாதனை படைத்தார். 22.5 கிலோ வரை நகத்தால் தூக்கி உலகிலேயே முதல் நகத்தின் பலம் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையாளரான ஹேமச்சந்திரன் திடீரென நல்லூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் செய்துகொண்ட 11 மாதமே ஆன நிலையில் தற்கொலை செய்துகொண்டதையடுத்து குடும்ப பிரச்சனையா? அல்லது கடன் தொல்லையா? என நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.