¡Sorpréndeme!

துறவிகளாக மாறும் கோடிஸ்வரிகள்- வீடியோ

2018-10-23 1,141 Dailymotion

திருவண்ணாமலை தொழிலதிபரின் மகள்கள் 2 பேர் துறவிகளாக மாறுகிறார்கள்.

திருவண்ணாமலையை சேர்ந்த தொழிலதிபர்களான கவுதம்குமார் அரவிந்த் குமார். 2 பேரும் சகோதரர்கள். ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள்.கவுதம்குமாருக்கு 2 மகளும் ஒரு மகனும் உள்ளனர். 2-வது மகள் பிரெக்ஷா (வயது 26). அரவிந்த் குமாருக்கு 2 மகளும் ஒரு மகனும் உள்ளனர். 2-வது மகள் ஸ்வேதா பிரெக்ஷாவும் ஸ்வேதாவும் ஜெயின் மதத்தில் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள உள்ளனர்.இதுகுறித்து 2 பேரின் தந்தையும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது எங்களது மகள்கள் இருவரும் பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். பிரெக்ஷா எம்.பி.ஏ. படித்துள்ளார். ஸ்வேதா சி.ஏ. படித்துள்ளார்.இருவரும் 22 வயது இருக்கும்போது ஜெயின் மதத்தில் துறவரம் போகப்போவதாக கூறினர். நாங்கள் அதை முதலில் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் துறவரம் செல்வதிலேயே உறுதியாக இருந்தனர். எங்களது கண்ணீர் அவர்கள் மனதை மாற்றவில்லை. அன்பாகவும்இ மிரட்டியும் பார்த்தோம் எனினும் அவர்கள் இருவரும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.துறவரம் செல்வது என்பது சாதாரண வி‌ஷயம் அல்ல... அதில் முள்பாதைகள் அதிகம்இ கட்டுப்பாடுகள் அதிகம் என்று குடும்பத்தினர் எடுத்துக்கூறியும் அவர்கள் தங்களது முடிவை மாற்றி கொள்ளவில்லை. பின்னர் நாங்கள் அவர்களின் முடிவை ஏற்றுக்கொண்டோம். முதலில் வேதனையாக இருந்தது. பின்னர் அதை நாங்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டோம். துறவரம் செல்ல வேண்டும் என்றால் அதற்கான எம்.ஏ.ஜெயினினாலஜி படிக்க வேண்டும். அவர்களை ராஜஸ்தானில் உள்ள மத கல்லூரியில் சேர்த்தோம். 3 ஆண்டுகள் 8 மாதம் படித்தனர். படிக்கும் போது அவர்களின் மனநிலையை மூத்த துறவிகள் ஆராய்ந்து இருவரும் துறவரத்திற்கு தகுதியானவர்கள் என்று சான்று அளித்தனர்.

Dea: Two daughters of Thiruvannamalai industrialist are converted to saints.