¡Sorpréndeme!

புதிதாக திறக்கப்பட்ட சிமெண்ட் கால்வாயை சரியாக பூசாததால் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது

2018-09-06 2 Dailymotion

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியும் பயனடையும் வகையில், வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல 87 கோடி ரூபாய் செலவில் சிமெண்ட் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளோட்டத்திற்காக இந்த கால்வாயில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், குன்னத்துப்பட்டிக்கும், தெப்பத்து பட்டிக்கும் இடையேயுள்ள சிமிண்ட் கால்வாயில் நூறு மீட்டர் நீளத்திற்கு ஆங்காங்கே தண்ணீர் வெளியேறி வருகிறது. வீணாகி வெளியேறும் நீரை, பொதுமக்கள் குடங்களில் பிடித்து செல்கின்றனர்.