சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் ஒன்றியத்தில் அனுப்பூர் ஊராட்சியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சி நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தார். பின்னர் பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார்.