உசிலம்பட்டி பகுதிகளில் கிராம கால்வாய் திட்டத்தில் சோதனை ஓட்டத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மிகவும் தாமதமாக வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
உசிலம்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையான 58 கிராம கால்வாய் திட்டம் 20 ஆண்டு கால நீண்ட இழுபறிக்குபின் நிறைவுக்கு வந்துள்ளது. சோதனை ஓட்டத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனிடையில் ஆண்டிப்பட்டி புதுாருக்கும், கடவாய்ச்சுனை பகுதிக்கும் இடையில் கால்வாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் நிறுத்தப்பட்டு கால்வாய் உடைப்பு சரி செய்யப்பட்டு மீண்டும் 24ம் தேதி காலை மீண்டும் திறக்கப்பட்டது. கால்வாய் அமைக்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்டதால் தண்ணீர் வரத்து பகுதிகள் மேடாகியும், செடிகளும் வளர்ந்துள்ளது. அவற்றை விவசாயிகள் கால்வாயில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீரின் வரத்து தொடர்ந்து காலதாமதமாக வருவதால் பாசனத்திற்கு நீர் இல்லாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
The farmers are suffering from the delayed water supply for the test run in the village canal project in Usilampatti.