திருமணமான 2 ஆண்டுகளே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை அடித்து கொலை செய்ததாக கூறி பெண் வீட்டார் கணவரின் வீட்டை அடித்து நொருக்கியதால் பரபரப்பு… கணவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் வடச்சேரி பகுதியை சேர்ந்த ஞானமூர்த்தி. கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நந்தினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் .திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஞானமூர்த்தி திருமணமான சில நாட்களில் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வருவதால் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது .வழக்கம் போல் ஞானமூர்த்தி நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி நந்தினியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது .இதனால் விரக்தியடைந்த நந்தினி வீட்டில் தன்னுடைய சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .இதனை அறிந்த நந்தினியின் உறவினர்கள் ஞானமூர்த்தி அடித்து கொலை செய்ததாக கூறி அவருடைய வீட்டில் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் வீட்டு சாமான்களை அடித்து நொறுக்கியுள்ளனர் .இது குறித்து நந்தினியின் தந்தை சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு ஞானமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நந்தினி உயிரிழந்ததையடுத்து அவரது உறவினர்கள் ஞானமூர்த்தியின் வீட்டிற்கு சென்று ஆத்திரத்தில் வீட்டை அடி நொருக்கினர்.