கேரளா முதல்வர் 20 கோடி பேரிடர் இழப்பு நிதியாக வழங்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அதை மத்தியஅரசு உடனடியாக வழங்க வேண்டும் என தூத்துக்குடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
பிரணாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராக வந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து 22 ஆண்டுகளாக போராடி வருகிறேன் என தெரிவித்த அவர், நேற்றைய தினம் பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து நடைபெற்ற விசாரணையில் ஆலைக்கு எதிராக வெளிமாநிலத்திலிருந்து ஆட்களை கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபடத்தினர் என்ற தவறான தகவல் செல்லப்பட்டது என்றும் அரசியல் கட்சியினர் தூண்டுதல் பெயரில் போராட்டம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தேன் என்றார்.
Des: Kerala Chief Minister insisted that Rs 20 crore disaster relief would be provided. MDMO general secretary Vaiko said that the government should immediately provide it