¡Sorpréndeme!

கல்லூரி மாணவன் கடத்தல்.. போலீசார் உஷார்

2018-08-18 1,066 Dailymotion

காட்பாடி ராதாகிருஷ்ணன் நகரில் வசிப்பவர் ரமேஷ். இவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் டிஜ்ஜோ ரமேஷ் திருநெல்வேலியில் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். விடுமுறைக்காக அவர் சொந்த ஊரான காட்பாடிக்கு வந்திருந்த நிலையில் இரவு சுமார் 9.30 மணியளவில் கார் ஒன்று அவரின் வீட்டின் முன்பாக நின்றதுடன் டிஜ்ஜோ செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வெளியே வரும்படி அழைத்தனர். டிஜ்ஜோ தனது நண்பர்கள் தான் அழைக்கிறார்கள் என்று வீட்டிற்கு வெளியே வந்த போது காரில் இருந்தவர்கள் டிஜ்ஜோவை வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளி கடத்தி சென்றனர்.

Kidnap at vellore