கேரளாவில் இன்று மீண்டும் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கியது. கேரளா, கர்நாடகாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் பெய்து வருகிறது.
Indian Meteorological center warns very heavy rain in Kerala today. Five districts of Tamilnadu also will get heavy rain.