¡Sorpréndeme!

கூட்டம் என்று அழைத்து அலைக்கழிப்பு விவசாயிகள் குமுறல்- வீடியோ

2018-08-17 152 Dailymotion

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் விவசாயிகளுக்கும் குறைகளை தீர்த்து வைப்பதாக அறிக்கை அனுப்பி இருந்தனர் இதன் அடிப்படையில் விவசாயிகள் அனைவரும் தங்களின் குறைகளை எடுத்துச் கூறவும் பிரச்சினைகளை சொல்லவும் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் தனபால் தலைமையிலும் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் முல்லை முன்னிலையிலும் 50 க்கும் மேற்பட்டோர் சென்று இருந்தனர். ஆனால் அலுவலகத்தில் சார் ஆட்சியர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் கேட்டபோது உங்களது துறைகளில் தீர்ப்பு கூட்டத்தை நாங்கள் நடத்துகிறோம் என்றும் எங்களிடம் உங்கள் குறைகளை கூறுங்கள் எனக் கூறியுள்ளனர். ஆனால் விவசாயிகள் சார் ஆட்சியர் இருந்து எடுக்கப்படும் முடிவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் தயங்குகின்றனர். எந்த ஒரு நடவடிக்கையும் எங்களுக்கு நிறைவேறுவதில்லை அதுமட்டுமின்றி கூட்டத்தை நம்பி வெகு தொலைவில் இருந்து வந்துள்ளோம் என்றும் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றவோ அதிகாரிகள் தொடர்ந்து கூட்டத்தை புறக்கணித்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

Des: The crowds called the tornado farmers to call it