வாணியம்பாடி திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று 72 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரத்குமார் ஏற்றினார். அப்போது தேசிய கொடி கயிற்றில் தலைகீழாக கட்டப்பட்டு இருந்ததை கவனிக்காமல் அப்படியே ஏற்றினார்.தேசிய கொடி ஏற்றிய பின்னர் தான் தேசிய கொடி தலைகீழா ஏற்றப்பட்டது தெரியவந்தது. இதனிடையில் தேசிய கொடி தலைகீழா ஏற்றப்பட்டதை அப்பகுதியில் உள்ளர்கள் படம் பிடித்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வலை தளங்களில் வைரலாக படங்கள் வெளியானதை கண்ட உயரதிகாரிகள் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்த பின்னர் மீண்டும் கொடியை சரி செய்து ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்றப்பட்டது.
Des : The celebration of the 72nd Independence Day was held yesterday at Wanimbambadi Thimmampettai police station