கல்வித்துறையில் அண்மை காலமாக விடைத்தாள் திருத்துவது மற்றும் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்வதில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும், மாணவர்கள் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத காரணத்திற்காக ஆயிரம் ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. "17-ஏ" பிரிவின் கீழ் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே
தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட 300 மாணவர்களுக்கு பருவத்தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.