¡Sorpréndeme!

எம்ஜிஆர் பாணியில் எடப்பாடி- வீடியோ

2018-07-20 904 Dailymotion

மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து மேட்டூர் நோக்கி செல்லும் போது மேச்சேரி என்ற ஊரில் பள்ளி மாணவர்களையும் பொதுமக்களையும் சந்தித்து கைகுலுக்கி விட்டு சென்றார். எம்ஜிஆர் பாணியில் எடப்பாடி செயல்பட்டதால் அப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்தனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் டெல்டா பாசன விவசாயத்திற்காக அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து கார் மூலம் சென்றார். அப்போது மேச்சேரி என்ற ஊரில் அங்கிருந்த பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் எடப்பாடியை பார்ப்பதற்காக சாலையோராத்தில் நின்றனர். அவர்களை பார்த்ததும் குஷியான எடப்பாடி காரை விட்டு இறங்கி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கைகுலுக்கி புகைப்படம் எடுத்து கொண்டார். முதல்வருக்கு ஒருசிலர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்ஜிஆர் பாணியில் எடப்பாடி மக்களை சந்தித்து சென்றது அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

des: Mettur Dam to visit Mettur Dam to go to Mettur from the Chief Minister Edappadi Palanisamy to visit Mettur Dam and go to school and people in Meycheri. The migrant was happy with the performance of MGR style.