¡Sorpréndeme!

தொடரும் நிலம் கையகப்படுத்தும் பணிகள்..விவசாயிகள் குமுறல்- வீடியோ

2018-07-20 283 Dailymotion

வேலூர் மாவட்டத்தில் பெங்களூர் - சென்னை விரைவுப்பாதைக்கு விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

வேலூர்மாவட்டம்,திருமால்பூர் முதல் பொன்னை வரை பெங்களூர் தேசிய விரைவுப்பாதைக்கும் சேர்க்காடு முதல் அனந்தலை வரை ஆந்திரபாதைக்கும் அடுத்தடுத்து நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் . பெங்களூர் முதல் சென்னை வரை விரைவு பாதை அமைப்பதற்காக வேலூர்மாவட்டத்தில் திருமால்பூரில் துவங்கி அசநெல்லிக்குப்பம் மகேந்திரவாடி, கூத்தம்பாக்கம், பரப்பேரி ,புன்னை, உளியநல்லூர், வடக்கடப்பந்தாங்கல், வேப்பேரி, வட்டாங்குளம் வழியாக சென்று சுமார் 40 கிராமங்கள் வழியாக விரைவு சாலை அமைப்பதற்காக மத்திய அரசு மாநில அரசின் துணையோடு நிலங்களை அளவீடு செய்து வயல்வெளிகளிலும் விளைநிலங்களிலும் கற்களை நட்டுள்ளனர். இந்த 40கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கையக்கப்படுத்தப்படுகிறது மேலும் மா,தென்னை,பனைமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களும் குடிநீர் கிணறுகளும் இந்த சாலைக்காக வெட்டி அழிக்கப்படவுள்ளது தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்த பத்திரங்களை அதிகாரிகளை கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். விவசாயிகள் விரைவு சாலைக்காக தங்களின் அனுமதியில்லாமல் அதிகாரிகள் அளவீடு செய்து கற்களை நட்டுவிட்டு செண்ட் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் சந்தை மதிப்பு விற்கும் போது ஒரு செண்ட் நிலம் ரூ.4 ஆயிரம் தான் தரமுடியும் என்று கூறுவதாகவும் இது அடிமாட்டு விலை எனவும் விவசாயிகளை மிரட்டி ஏமாற்றுகிறார்கள் என்றதுடன் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ.9 ஆயிரமும், பனை மரம் ஒன்றிற்கு ரூ.1050 மாமரத்திற்கு ரூ.18 ஆயிரம் என இவ்வாறு குறைந்த இழப்பீட்டை இவர்கள் வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். காலம் காலமாக நாங்கள் பலதலைமுறைகளாக விவசாயம் தான் செய்து வருகிறோம் தற்போது இந்த நிலங்களை பெங்களூர் விரைவுபாதைக்காக அடாவடியாக பறித்துகொண்டால் எவ்வாறு வாழ்க்கையை நடத்துவது தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கபடுகிறது என கூறி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தங்களின் நிலங்களை கையக்கப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பரப்பேரி என்ற கிராமத்தில் பத்திரம் சரிபார்க்கும் அலுவலர்களுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது தங்களுக்கு அரசு நிலத்தை அடாவடியாக கைப்பற்றினால் நிலத்தின் மதிப்பில் 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆனால் இவர்கள் உண்மையான சந்தை மதிப்பை கூட அளிக்காதது வேதனையளிக்கிறது இவர்கள் வழங்கும் இழப்பீட்டை வைத்து ஒன்றும் செய்ய முடியாது எனவே அரசு விவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல் தங்களை பாதுகாக்க வேண்டும் இல்லையேல் தற்கொலை செய்துகொள்வோம் என்று கூறுகின்றனர்.

Des: Farmers suffer from the booming work of the agricultural lands for the Bangalore-Chennai Expressway in Vellore district.