¡Sorpréndeme!

மீன் விற்பணையில் அதிகாரிகள் ஆய்வு- வீடியோ

2018-07-19 937 Dailymotion

சமீபத்தில் கேரளாவில் மீன்களின் ஃபார்மலின் என்னும் ரசாயனம் கலக்கப்பட்ட மீன் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீன்வளத்துறை மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். மீன்வளத் துறை ஆய்வாளர் சசிகலா, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு சூரம்பட்டி அருகே உள்ள ஸ்டோனி பிரிட்ஜ் மீன் சந்தையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகள் கொண்டுவந்த வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி மீன்களின் மாதிரிகளை எடுத்து ரசாயனங்கள் மீன்களில் பயன்படுத்தப்பட்டு விற்பனைக்கு செய்யப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஃபார்மலின் எனும் ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள் வியாபாரிகளிடம் ஃபார்மலின் எனப்படும் ரசாயனங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் ஃபார்மலின் என்னும் ரசாயனங்களைக் கலந்து மீன்களை விற்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Des : recently discovered that chemically mixed fish of fish in formaldehyde is being sold in Kerala