¡Sorpréndeme!

பாஜக ஆட்சியால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 34 விவசாயிகள் தற்கொலை - முகுல் வாஸ்னிக்

2018-07-17 0 Dailymotion

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முகுல் வாஸ்னிக், மோடி ஆட்சிக்கு வரும் முன் கூறிய வாக்குறுதிகளை 4 ஆண்டுகளில் நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். விவசாய உற்பத்தி முற்றிலும் குறைந்து விட்டது என்றும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 34 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாடு முழுவதிலிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். ஆளும் அமைச்சர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மக்கள் பணி செய்யவிடாமல் தடுப்பதாக முகுல் வாஸ்னிக் குற்றம் சாட்டினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV