¡Sorpréndeme!

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 31 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

2018-07-17 0 Dailymotion

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளிடம், மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது இலியால் என்பவர் தனது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த 660 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த சுமித்ரா என்பவர் உடலில் அணிந்து மறைத்து எடுத்து வந்த தங்க சங்கிலி மற்றும் வளையல் உட்பட 350 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் விலை சுமார் 31 லட்ச ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV