¡Sorpréndeme!

பசுமைச்சாலை - கருத்து கேட்கவிடாமல், அன்புமணியை தடுப்பது ஏன் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

2018-07-17 0 Dailymotion

சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு பலவேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தால் தருமபுரி தொகுதியில் பாதிக்கப்படும் விவசாயிகள், கிராம மக்களிடம், கருத்து கேட்கும் கூட்டம் நடத்த அந்த தொகுதி எம்.பி அன்புமணி ராமதாசுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து பாமக துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்த போது, அன்புமணி ராமதாஸ் தலைமையில் சேலம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு இல்லாத வகையில் மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்து முடிந்துள்ளதாகவும், அடுத்த மாதம் முதல் வாரத்தில் தருமபுரி மாவட்டம் அரூரில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. பசுமை வழி சாலையால் பாதிக்கப்படும் மக்களை, அன்புமணி ராமதாஸ் சந்திக்க விடாமல் அரசு தடுப்பது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி அடுத்த மாதம் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV