¡Sorpréndeme!

தஞ்சை - மதுரை 8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ -மாணவிகள் போராட்டம்

2018-07-17 1 Dailymotion

சேலம்- சென்னை 8 வழிச்சாலை அமைப்பதை கைவிட வலியுறுத்தி போராட்டங்களில் வலுத்து வரும் நிலையில், தஞ்சை-மதுரைக்கு 8 வழிச்சாலை அமைக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தஞ்சாவூர் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள்ளேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி பேராசியர்கள் கலைந்து செல்லும் படி மிரட்டியதால் பேராசியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாய நிலங்களை அழித்துவிட்டு செயல்படுத்தும் இந்த திட்டங்களை கைவிடும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV