உயர்நீதிமன்ற அனுமதி பெறாமல் யோகா மருத்துவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
யோகா மருத்துவர்களை தேர்வு செய்யும் எழுத்துத் தேர்வை அனுமதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தரவரிசைப் பட்டியலை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சுகாதரத்துறை சார்பில் 73 யோகா டாக்டர்களை நிரந்தரமாக நியமிக்க எழுத்து தேர்வு நடைபெற்று முடிவடைந்த நிலையில், இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்படாததால் தேர்வு மட்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கியதோடு தரவரிசைப் பட்டியலை வெளியிட தடை விதித்து தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் சத்ருகண் பூஜாரி, தமிழக அரசின் சுகாதரத்துறை இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர், மருத்துவ தேர்வாணைய உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு இவ்வழக்கை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV