¡Sorpréndeme!

துரைமுருகன் அதிமுகவிற்கு மாறிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஸ்டாலின் இருக்கிறார் - ஆர்.பி உதயகுமார்

2018-07-17 1 Dailymotion

திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், திமுகவில் உள்ள துரைமுருகனுக்கும் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் துரைமுருகன் திமுகவிலிருந்து அதிமுகவிற்கு மாறிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஸ்டாலின் இருக்கிறார் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.....

அதிமுக சார்பில் காவிரி மீட்பு போராட்ட விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயகுமார், காவிரியினால் 19 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 16 மாவட்டங்களுக்கு விவசாய வாழ்வாதாரமாகவும், 16.5 லட்சம் ஏக்கருக்கு இந்த நீர் ஆதாரத்தின் மூலமாகவே விவசாயம் செய்யப்படுகிறது என்றும் கூறினார். மேலும், திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், திமுகவில் உள்ள துரைமுருகனுக்கும் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் துரைமுருகன் திமுகவிலிருந்து அதிமுகவிற்கு மாறிவிடுவாறோ என்ற அச்சத்தில் ஸ்டாலின் இருக்கிறார் என்றார்


Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV