¡Sorpréndeme!

ஒ.எஸ்.மணியனுக்கு காவிரி பிரச்சனை எப்போது தொடங்கியது என தெரியுமா? - துரைமுருகன் கேள்வி

2018-07-17 0 Dailymotion

சென்னை கோட்டூர்புரத்தில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் திமுக முதன்மை செயலாளர் துரை முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் சென்னை மேயர் மா சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த பொதுகூட்டத்தில் பேசிய துரைமுருகன், அதிமுக ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது, இதுவரை என்ன சாதித்தார்கள் என கேள்வி எழுப்பினார். கம்பராமாயணத்தை எழுதியது யார் என்று தெரியாத முதல்வர், காவிரி பற்றி பேசுவதா என விமர்சித்தார். மேலும் அமைச்சர் என்ற தகுதி தவிர வேறு தகுதி இல்லாத ஒருவர் தான் ஓ.எஸ்,மணியன் என்றும், தன்னை சவாலுக்கு அழைக்கும் ஒ.எஸ். மணியனுக்கு காவிரி பிரச்சனை எப்போது தொடங்கியது என தெரியுமா என்றும் கேள்வி எழுப்பினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV