இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் டி20 தொடருக்கு இந்திய வீரர் தீபக் சாஹர் காயத்தால் வெளியேறிய பும்ராவுக்கு மாற்று வீரரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இளமை காலத்தில் கிரிக்கெட்டில் சந்தித்த சோதனையான சம்பவம் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது. அது குறித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், “சாஹர்-இன் கதை மிகவும் ஆச்சரியமானது. அவர் இளம் வயதில் ராஜஸ்தானில் உள்ள ஹனுமன்கர் நகரில் பயிற்சி மேற்கொண்டார். அப்போது, ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக இருந்த ஆஸ்திரேலியாவின் கிரெக் சாப்பலை சந்தித்த போது, தீபக் சாஹரை கிரிக்கெட்டை விட்டு சென்று விடுமாறு கூறினார்.
Greg chappell once said chahar would never become a cricketer, Akash Chopra shared his thoughts.