ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் இன்று அமர்நாத் யாத்திரை தொடங்கியது. அம்மாநில தலைமை செயலாளர் பிவிஆர் சுப்பிரமணியம் யாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஆளுநருக்கான ஆலோசகர்கள் வியாஸ், விஜயகுமார் பங்கேற்றனர். அமர்நாத் குகை கோவில் பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் வருகை தருகின்றனர். இந்த யாத்திரை மொத்தம் 40 நாட்கள் நடைபெறும்.