திறந்தவெளி ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற இரண்டு வாலிபர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
திருப்பரங்குன்றம் பகுதியில் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் இருந்து வெயலுக்கு உகந்த அம்மன் கோயில் வரை 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதையில் தடுப்புகள் இல்லாமல் திறந்த வெளி பாதையாக ரயில்வே இருப்பதால் அதிகமான மக்கள் ரயில்வே பாதையை பயன்படுத்துகின்றனர். இரயில் பாதையை கடந்து செல்லும் போது இரயில் மோதி அதிகமான விபத்துக்கள் இப்பகுதியில் ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு செல்வா என்ற கல்லூரி மாணவர் ரயில்வே கேட்டை கடக்க முற்பட்டபோது ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தார் .இந்த நிலையில் இன்று காலை மீண்டும் ஒரு வாலிபர் ரயில் மோதி பலியானர் . திறந்த வெளி ரயில்வே கிராசிங் என்பதால் அப்பகுதியில் அடிக்கடி ரயில் மோதி உயிர்கள் பலியாவதால் அச்சம் அடைந்துள்ள அப்பகுதி மக்கள் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்