¡Sorpréndeme!

கவுரி லங்கேஷ், கல்புர்கி, இரண்டு பேரையும் சுட்டது ஒரே துப்பாக்கிதான்

2018-06-08 4,515 Dailymotion

கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அதே துப்பாக்கிதான் எழுத்தாளர் கல்புர்கியை கொலை செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவின் தார்வாட் நகரை சேர்ந்த எழுத்தாளர் கல்புர்கி ஆகஸ்ட் 30, 2015ல் அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில், கோவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சனாதன் சன்ஸ்தா அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என கர்நாடக போலீசார் சந்தேகித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Same Gun used to kill Gauri Lankesh and MM Kalburgi Says Forensic Report.