¡Sorpréndeme!

காவல் நிலையத்தில் திருட்டு...பலே திருடன்...வீடியோ

2018-06-08 1,176 Dailymotion

காவல் நிலையத்திற்குள் புகுந்து அரசு வழங்கிய எஸ்ஐயின் பைக்கை திருடிய சென்ற கொள்ளை சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் நகர காவல் நிலையத்தில் எஸ்ஐ ஆக பணியாற்றி வருபவர் அழகுராம். இவருக்கு ரோந்து பணிக்காக அரசு சார்பில் பைக் வழங்கப்பட்டுள்ளது. நேற்று இவர் காவல் நிலையத்திற்கு வெளியில் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது காவல் நிலையத்திற்குள் புகுந்த கொள்ளையன் எஸ்ஐ யின் பைக்கை லாவகமாக திருடி சென்றுள்ளான். அந்த காட்சிகளை இப்போது பார்க்கலாம். காவல்நிலையத்திற்குள்ளே பைக்கை ஆட்டை போட்டு சென்ற கொள்ளையனை போலீசார் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையில் தனது பைக் காணாமல் போனதால் எஸ்ஐ அழகுராமுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.