¡Sorpréndeme!

மூதாட்டிகள் கொலை.. மர்ம நபருக்கு வலைவீச்சு- வீடியோ

2018-06-06 401 Dailymotion

மூதாட்டிகளை குறிவைத்து தொடந்து தாக்குதல் நடத்துவதுடன் கொலை செய்யப்படுவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

அரக்கோணம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் மூதாட்டி ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அதனையடுத்து நேற்று வெங்கடேசபுரத்தை சேர்ந்த ஜெயலெட்சுமி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஜெயலெட்சுமி கொடூரமாக தாக்கி விட்டு ஓடியுள்ளார். தாக்கப்பட்ட ஜெயலெட்சுமியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடந்து மூதாட்டிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவது சைகோவாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்கப்பட்ட மூதாட்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.