திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர் அணையில் மூழ்கி உயிரிழந்த சம்வத்தால் திருமண வீடு துக்கவீடானது.
தேனி மாவட்டம் எண்டப்புலி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் நிறுவத்தில் பணியாற்றி வருகிறார். சுரேசும் அவரது மனைவியும் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக தேனிக்கு வந்துள்ளனர். திருமணம் முடிந்த உடன் சுரேஷ் தனது நண்பர்களுடன் வைகை அணையில் குளிக்க சென்றுள்ளார். வைகை அணையில் தற்போது தண்ணீர் அதிகமாக உள்ளது. அணையின் முகப்பு பகுதியில் குளித்து கொண்டிருந்த சுரேஷ் திடீரென தண்ணீர் ஆழம் உள்ள பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தால் திருமண வீடே துக்க வீடாக மாறியது.