அரபிக்கடலில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் குளச்சல், முத்தம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகளுக்கு மீன்பிடிக்க மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துவருகிறது. அதன்படி, கன்னியாகுமரியில் மீன்களின் இனபெருக்கத்திற்காக கிழக்கு கடற்கரையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடந்ததை தொடர்ந்து இன்று முதல் மேற்கு கடற்கரை பகுதிகளான மூட்டம் முதல் நீரோடி வரை மற்றும் கேரளாவிலும் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது.