சினிமாவை போன்று அரசியலிலும் யாரோ ரஜினியை இயக்குகிறார்கள் என்று தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என கூறும் ரஜினி, நிஜ வாழ்க்கையில் வேறு நிலைபாட்டை கொண்டவர் என்றும் அவர் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று பேசினார்.